Aug 14, 2009

செம்மண் தேரி

உயர்ந்த செம்மண் குன்றுகளாகப் பரந்து விரிந்து காட்சி தரும் செம்மண் தேரிகள் தென்பாண்டி நாட்டிற்குக் குறிப்பாகத் திருச்செந்தூர்ப் பகுதிக்கு அழகு தருவனவாகும். சேம்பொன் தகடு செய்து பரப்பினாற் போன்று பரந்து உயர்ந்து காணப்பெறும் தேரிகள் சிற்சில இடங்களில் முந்நூறு அடி உயரத்தையும் கொண்டிருக்கும். குமரி முனையிலிருந்து தொடங்கி திருச்செந்தூர் நாங்குநேரி சாயர்புரம் பகுதிகள் வரை விரிந்து கிடக்கும் இத்தேரிகளை ஆராய்ந்த பெருமக்கள் இவை வரவாற்றுக் காலத்திற்கு முந்தியவை என்று குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. plz put few songs about our ayyanar.then add gallery .

    ReplyDelete